முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. உன்னதி பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று வழக்குகளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ளது. அதன்படி,
வழக்கு இலக்கம் HCB/353/2025 இன் கீழ், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையால் 3000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு ரூ. 128,520 /- நட்டம் ஏற்படுத்தி ஊழல் குற்றம் புரிந்தமை.
வழக்கு இலக்கம் HCB/354/2025 இன் கீழ், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையானது, மஹாவௌ வீ ஹேன ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.360,000/= தொகையைச் செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளைத் தூண்டி ஊழல் குற்றம் புரிந்தமை.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு எதிரான வழக்கு இலக்கம் HCB/355/2025 இன் கீழ், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளை வற்புறுத்தி, அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், சிலாபம் தேசிய சேமிப்பு வங்கியின் கணக்கில் ரூ.494,000/= வரவு வைக்க வேண்டுமென்று பணித்தமை மூலம் குறித்த தொகையை அரசு இழக்க நேரிட்டமை மூலம் ஊழல் குற்றம் புரிந்தமை.
மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 08.01.2025 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 03 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.