மாவனல்லை, உத்துவான்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவருக்குச் சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத் திட்டத்திற்கான அனுமதியை வழங்குவதற்காக மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் மற்றும் சாரதி ஆகியோர் இரண்டு இலட்சம் ரூபா (இரண்டு மில்லியன் ரூபா) இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் நடந்த விசாரணையின் அடிப்படையில் மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் மற்றும் சாரதி ஆகியோர் மீது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதன்படி, இவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 08.01.2025 அன்று HCB/357/2025 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.