செல்லுபடியான வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வாகனம் செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும் பேரில் மது போத்தல் ஒன்றை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடை குற்றத்திற்கு எதிராக MC B 34056/01/2015 எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் ஆணைக்குழுவினால்; தொடரப்பட்ட வழக்கில், கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஜி.கே.சமிந்த கமல்சிறி விஜேசிங்கவை குற்றவாளியென தீர்ப்பளித்து, கடந்த 31.01.2025 அன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் பிரதான நீதிவான் கௌரவ பிரசன்ன அல்விஸ் அவர்கள் தீர்ப்பினை வழங்கினார்.
இதன்படி, இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 01 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் மேலும், ஒவ்வொரு குற்றத்திற்கும் ரூ 5000/= அபராதம் விதிக்கப்படடு தீர்ப்பளிக்கப்பட்டது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் உதவிப் பணிப்பாளர் சட்டம் திருமதி அனுஷா சம்மந்தப்பெரும இந்த வழக்கினை முன்னெடுத்தார்.