கம்பஹா மாபிம ஆரம்பப் பாடசாலையின் மாணவியை, தக்ஷிலா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்தில் சேர்க்கும் நோக்கத்துடனும் அறிவுடனும் கம்பஹா ஸ்ரீபோதி வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் டிகிரி பண்டார சேனாநாயக்ககே விக்ரம சேனாநாயக்க செயற்பட்டு ஊழல் குற்றம் புரிந்தமைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாகாணக் கல்விப் பணிப்பாளரின் முறையான அனுமதியின்றி மாணவியை கம்பஹா தக்ஷிலா வித்தியாலயத்தில் சேர்க்கும் நோக்கத்தில் அதிபர் கம்பஹா ஸ்ரீபோதி வித்தியாலயத்தில் அனுமதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 10.02.2025 அன்று வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது மேற்படி குற்றவாளி வழக்கின் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேற்படி குற்றம் சாட்டப்பட்ட அதிபர் குற்றத்தினை ஒப்புக்கொண்;ட பின்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் மன்றில் தோன்றிய முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி மேற்படி குற்றத்திளை ஒப்புக்கொண்டவர் தக்ஷிலா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்தில் சேர்க்கும் நோக்கத்துடனும் அறிவுடனும் குற்றத்தினை புரிந்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை போன்ற நடுத்தரக் குழந்தைகளின் தலைவிதியைத் தீரமானிக்கும் திறமையான பரீட்சையில் ஒரு பிள்ளையின் வாய்ப்பை தடுத்தமையை ஈடு செய்ய முடியாது எனவும் மேற்படி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்;குமாறு கோரிக்கை விடுத்தார்.
மேற்படி முன்வைப்புக்களை பரிசீலித்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் ஒத்தி வைப்பு உத்தரவினை பிறப்பிக்கவில்லை. அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும், விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறினால் 03 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.