குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலருக்கு இலஞ்ச குற்றச்சாட்டில் தண்டனை விதித்துத் தீர்ப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலர் ஒருவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த HCB 231/2023 எனும் வழக்கின் அடிப்படையிலான குற்றத் தீர்ப்பு கடந்த 20-02-2025 அன்று கொழும்பில் இயங்கும் மேல் நீதிமன்ற இல 03 இன் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி திரு. மஞ்சுள திலகரத்ன அவர்களினால் அறிவிக்கப்ட்டது.

மேற்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 5000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டபோது கடந்த 20.01.2020 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவினால் கைதுசெய்யப்பட்;டார். குறித்த முறைப்பாட்டாளரின் குழந்தையின் இரட்டை குடியுரிமையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காகவே மேற்படி இலஞ்சம கோரிப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச சட்டத்தின் பிரிவு 19ஆ மற்றும் 19இ இன் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேல் நீதிமன்ற இல 03 இல் 24-05-2023 அன்று அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 20-02-2025 அன்று வழங்கின் ஆரம்பத்திலேயே குற்றப்பத்திரத்தின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்குமான குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி பின்வருமாறு தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தார்.

  • ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • ரூபா 20000.00 தண்டப்பணம்
  • இலஞ்ச சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் ரூபா 6000.00 அபராதம் விதிப்பு

மேற்படி வழக்கின் முறைப்பாட்டாளர் சார்பில் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் செல்வி டயானா கொடிதுவக்கு மற்றும் பிரதிவாதியின் சார்பில் சனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸா அவர்கள் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search