அவிஸ்ஸாவெல பொலிஸ் நிலையத்தில் அப்போது பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, கஞ்சா வியாபாரம் எனும் குற்றத்திற்கு பதிலாக உடன் வைத்திருந்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தூண்டி ஊக்குவிப்பாக முறைப்பாட்டாளருக்கு ரூபா 100000.00 இலஞ்சமாக வழங்க முற்பட்டமை தொடர்பில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட HCB 290/24 வழக்கின் அடிப்படையில் கொடே விதானகே அனுஷா என்பவர் ஊக்குவிப்பாக முறைப்பாட்டாளருக்கு மேற்படி தொகையை இலஞ்சமாக வழங்க முற்பட்டமைக்கு எதிராக தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி 10.02.2025 அன்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் ரூபா 5000.00 அபராதமும் விதிக்கப்பட்டது. குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் 06 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதுடன் இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ரூ. 150,000/= பறிமுதல் செய்யப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் சார்பில் இந்த வழக்கினை உதவிப் பணிப்பாளர் நாயகம் திருமதி துஷாரி தயாரத்ன முன்னெடுத்ததுடன் மேற் குறித்த தீர்ப்பானது கொழும்பு மேல்நீதிமன்ற இல.07 இன் கௌரவ நீதிபதி திரு.பிரதீப் அபேரத்ன அவர்களினால் வழங்கப்பட்டது.