மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி (CCTV) கமராக்களை உரிய வரியைச் செலுத்தாமல் மத்திய தபால் பரிவர்த்தனையின் சர்வதேச விரைவுப் பிரிவில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முறைப்பாட்டாளரிடம் ரூபா 11000.00 இலஞ்சமாக கோரிப்பெற்றுக் கொண்டமை தொடர்பில் ராமவிக்ரம கமாராச்சிகே ருவன் என்பவருக்கு எதிராக ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட HCB 176/2022 வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 06.02.2025 அன்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் 04 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 04 குற்றச்சாட்டுகளுக்கு தலா 07 வருடங்கள் வீதம் 28 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், சிறைத் தண்டனையானது ஒரே தடவையில் செல்லும் விதத்தில் 07 வருடங்கள் ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. 04 குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூபா.5000/= அபராதம் விதிக்கப்பட்டதுடன் செலுத்தாவிட்டால் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூபா11இ000ஃஸ்ரீ தண்டம் விதிக்கப்பட்டதுடன் மூன்றாவது குற்றச்சாட்டிற்கு ரூபா 11000/= அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் சார்பில் இந்த வழக்கினை உதவிப் பணிப்பாளர் சட்டம் திரு கயான் மாதுவகே முன்னெடுத்ததுடன் மேற் குறித்த தீர்ப்பானது கொழும்பு மேல்நீதிமன்ற இல.04 இன் கௌரவ நீதிபதி திரு. மகேஷ் வீரமன் அவர்களினால் வழங்கப்பட்டது.