கொழும்பு, புதிய செட்டியார் தெருவினைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், முறைப்பாட்டாளரிடம் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான 10 தங்க நெக்லஸ்கள் கைப்பற்றப்பட்டதுடன், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூ.2,500,000/- (இருபத்தைந்து லட்சம் ரூபாய்) இனை முறைப்பாட்டாளரிடம் இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சம்பவத்ததுடன் தொடர்புடைய விமான நிலைய பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக 25.02.2025 அன்று கொழும்பு மேல் நீதிமன்றில் HCB/360/2025 இலக்கத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.