மஸ்கெலியா மிருக வைத்திய அலுவலக பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்காக மிருக வைத்திய அலுவலக பரிசோதகருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 5000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விவசாயியான முறைப்பாட்டாளர் மாடுகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை பெறமுனைந்த வேளை, அதனை வழங்குவதற்கு முறைப்பாட்டாளரிடமிருந்து 5000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரியதுடன் தொடர்புடைய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணைக்குமுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த மிருக வைத்திய அலுவலக பரிசோதகரை கைது செய்து மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர்.
விசாரணையின் போது மிருகவைத்திய திணைக்கள அலுவலர்கள் வைத்தியர்களும் சாட்சிகளை வழங்கனர்.
ஆணைக்குழுவின் பொலிஸ் பரிசோதகர் லிவேரா தலைமையிலான குழுவினரால் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், உதவிப்பணிப்பாளர் (சட்டம்) திருமதி பக்தி சேத்தனா அவர்களினால் வழக்காடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.