கொகரல்லை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நான்கு குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்துள்ளது.
இங்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ விகும் கலுஆரச்சி அவர்கள் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 2 வருட சிறைததண்டனை விதித்து தலா எட்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் ஒரு குற்றச்சாட்டிற்கு ரூ 3000.00அபராதமும்> இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட ரூபா 5000.00 இனை தண்டப்பணமாக விதித்தும் தீர்ப்பளித்ததுள்ளார்.
சாரதியான முறைப்பாட்டாளர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்து தனது நன்பர்களை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு முறைப்பாட்டாளரிடம் குற்றஞ்சாட்டப்பட்டவர் 5000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரியுள்ளார். அது தொடர்பில் முறைப்பாட்டாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணைக்குமுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 5000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரிப்பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கெரிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
முறைப்பாட்டாளரின் சட்டத்தரணிகள்: பி. ஆர். ஏ. ஜயசிங்க உதவிப்பணிப்பாளர் (சட்டம்)
செல்வி உதாரி குமாரிஹாமி உதவிப்பணிப்பாளர் (சட்டம்)
விசாரணை அலுவலர்கள்: பொலிஸ் பரிசோதகர் அபேசிங்ஹ
உதவி பொலிஸ் பரிசோதகர் சமன் பிரசன்த.