ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரன முறைப்பாட்டளருக்கு நுழைவுப் பாதையை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூபா 3 மில்லினை கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கௌரவ கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க அவர்கள்> குற்றஞ்சாட்டப்பட்ட களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரன அவர்களை நான்கு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக்கி 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிறைத்தண்டனை ஒரே தடவையில் செல்லும் வகையிலும்> ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 5000.00 வீதம் தண்டம் விதித்தும் தீர்ப்பளித்தார். குற்றப்பணமாக 3 மில்லியனை செலுத்துமாறும்> பாதிக்கப்பட்ட காணி உரிமையாளருக்கு 2 மில்லியன்களை நட்டஈடாக செலுத்துமாறும் கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.