வழக்கிலக்கம்: 6835/2012
குற்றஞ்சாட்டப்பட்டவர்: எஸ். வீ. பி. ஹெக்டர் தர்மசிரி
2007 செப்டம்பர் 01 முதல் 2007 அக்டோபர் 09 வரையிலான காலகட்டத்தில்> மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தர்ப்பத்தில்
ஒரு அரச ஊழியராக இருந்து கொண்டு> தனது பதவியை நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் விதத்தில் செயற்படுவது இலஞ்சம் அல்லது ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அவ்வகையில் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிந்து கொண்டு அதிகாரிகளை மினுவாங்கொடவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த தனது வீட்டின் நிர்மானப்பணிகளுக்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்தியமை சட்டவிரோதமானதாகும் என்ற அடிப்படையில இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்பு கௌரவ பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கின் தீர்ப்பினை 2019 ஜுலை மாதம் 02 ஆம் திகதி அறிவித்தார். அதன் படி குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த ஆறு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் 1 வருட சிறைத்தண்டனை விதிக்கபட்டதுடன் ஆறு குற்றச்சாட்டுக்களில் 03 குற்றச்சாட்டுக்களுக்கு ஒரே தடவையில் கடந்து செல்லும் வகையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையினால் மொத்த சிறைத்தண்டணைக் காலம் 03 வருடங்களாக்கப்பட்டது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் ரூபா 50,000.00 வீதம் 06 குற்றச்சாட்டுக்களுக்கும் ரூபா 300,000.00 தண்டப்பணம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆணைக்குழுவின் சார்பில் உதவி பணிப்பாளர் நாயகம் திரு அசித அந்தனி அவர்களும்> குற்றம் சாட்டப்பட்டவருக்காக சட்டத்தரணி திரு. லால் குலரத்ன ஆகியோரும் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.