இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் மாத்தளை மாவட்ட தொழிலாளர் திணைக்கள அலுவலகத்தில் தொழில் அலுவலராக சேவைபுரிந்த குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளர் தனது கராஜில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நுPகு கட்டணத்தை செலுத்தாமலிருக்க உதவும் வகையில், முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவரிடமிருந்து இருந்து ரூ. 150,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட போது ஆணைக்குழுவின் சுற்றி வளைப்புப்பிரிவினால் கைது செய்யப்பட்டு மேற்படி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி திரு மஞ்சுல திலகரட்ன அவர்கள் குறித்த குற்றவாளிக்கெதிரான நான்கு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றஞ்சாட்டி 21/05/2019 அன்று 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
மற்றும் இலஞ்ச சட்டத்தின் பிரிவு 26 இன்பிரகாரம் ரூபா 150,000.00 தண்டம். தண்டப்;பணத்தை செலுத்தத் தவறின் 6 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் சார்பில் உதவிப்பணிப்பாளர் (சட்டம்) திருமதி அனுத்தரா ஜயசிங்க மற்றும் உதவிப்பணிப்பாளர் (சட்டம்) திருமதி துஷாரி தயாரத்ன ஆகியோரினால் வழக்காடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.