தெரனியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிகா விஜேசிங்கவுக்கு 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு

தெரானியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிகா விஜேசிங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலத்துங்க அவர்கள் இன்று (04) 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

தெரானியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிகா விஜேசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரத்தின் முன்வைக்கப்பட்ட 01, 02, 05 மற்றும் 06 ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவருக்கு ; ஒரு குற்றத்திற்கு 6 வருட வருடங்கள் வீதம் மொத்தம் 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் நான்கு கற்றச்சாட்டுக்களுக்கும் ஒன்றுக்கு ரூபா 5000.00 வீதம் ரூபா 20000.00 குற்றப்பணமாகவும் விதித்து தீர்ப்பளிக்கப்ட்டதுடன் அதனை செலுத்தத் தவறினால் ஒரு குற்றத்திற்கு 1 வருடம் வீதம் மேலும் நான்கு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

அத்துடன் இவ்வலக்கின் முறைப்பாட்டாளருக்;கு ரூபா 250000.00 இழப்பீடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை வழங்கத்தவறினால் மேலும் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் தெரானியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிகா விஜேசிங்க மற்றும் அப்போதைய தெரானியகல பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் சிறில் அபே விக்ரம ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதாகும். வழக்கிள் ஆரம்பத்திலேயே இரண்டாவது குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இவ்வழக்கின் முறைப்பாட்டாளரான நயனா குமாரி என்பவருக்கு வீதிச்சான்றிதழை வழங்குவதற்கு முதலாவது குற்றவாளியினால் ரூபா 500,000.00 கோரப்படடு அதில் ரூபா 400,000.00 இனை இரண்டாவது குற்றவாளியன் மூலம் பெற்றுக் கொண்டமைக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், குறித்த வழக்கிளை ஆணைக்குழுவின் சார்பில் திருமதி அநுராதா சிரிவர்தன (உதவிப்பணிப்பாளர் சட்டம்) அவர்கள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search