புத்தளம் மாவட்ட / மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றிய ஒருவர் 4500.00 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலதுங்கா அவர்களினால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும்> ரூபா 5000.00 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
முறைப்பாட்டளருடன் சம்பந்தப்பட்ட புத்தளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பராமரிப்பு வழக்கு எண் 23007/16 / P 2 இன் படி> முறைப்பாட்டளர் மாதந்தோறும் ரூபா 12,000.00 என்ற பராமரிப்பு தொகையை வழக்காளிக்கு செலுத்த வேண்டியிருந்;த நிலையில் அதனை
குறைப்பதற்கு உதவும் வகையில் முறைப்பாட்டளரிடமிருந்து ரூபா 6000.00 இலஞ்சமாக கோரியுள்ளார். அதன்படி, முறைப்பாட்டளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணைக்குழுவவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த குற்றவாளி முதலில் ரூபா 6000.00 இனை இலஞ்சமாக கோரி 4500.00 இனை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முறைப்பாட்டளரின் சட்டத்தரணி: திருமதி எஸ்.ஏ. பக்திசேத்தனா, உதவி பணிப்பாளர் (சட்டம்)
விசாரணை அதிகாரிகள் - செனவிரத்ன (உ. பொ. ப), 28992 மதுஷங்கா (பொ. கொ)