கஹவத்த பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்த முன்னாள் பொலிஸ் சார்ஜென்ட் ஆர்.எம். ஜயசேன இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ பிரதீப் ஹெட்டியாரச்சி அவர்களினால் 23.07.2019 அன்று இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தின் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அது ஒரே தடவையில் கழிந்து செல்லும் விதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா ரூபா 5000.00 வீதம் ரூபா 20இ000.00 தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், இலஞ்ச சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் ரூபா 15, 000.00 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறின், 01 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் (சட்டம்) திருமதி அனுராதா சிரிவர்தனா அவர்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.