பொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகர் ஒருவரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் ரூபா 10,000.00 தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பபளித்தது.
குற்றவாளியாள், தனது பேரனை காலி ரிச்மண்ட் கல்லூரியில் அனுமதிப்பதற்கு முனைந்த முறைப்பாட்டாளரான பொதுமகனிடம் மேற்படி ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2017 பெப்ரவரி மாதம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் 2018 நவம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் முதல் நாளிலேயே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திறந்த நீதிமன்றில் ஒப்புக்கொண்டமையினால் மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலதுங்கா அவர்கள் அவரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்தார். அது தொடர்பில் மேலும் ஆராய்ந்த நீதிபதி விதிக்கப்பட்ட மேற்படி தண்டனையை பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. பிரியன்த சந்திரசிர அவர்களின் வழகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் கலன்சூரிய அவர்களினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன் முறைப்பாடானது பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் உதவிப் பணிப்பாளர் சட்டம் திருமதி மனோதி ஹேவாவசம் அவர்களினால் முன்னெடுக்கப்பட்;டது.