அம்பாறை நில ஆணையாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்ட கள பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய நபரொருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு விகும் களுஆரச்சி அவர்களினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.
இலஞ்ச சட்டத்தின் 19 (ஆ) மற்றும் 19 (இ) பிரிவுகளின் அடிப்படையில் இலஞ்சத்தினை பரிந்து கோரியமை மற்றும் பெற்றுக கொண்டமைக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் வழக்கினை விசாரித்த கௌரவ நீதிபதி அவர்கள் குறித்த கள பயிற்றுவிப்பாளரை குற்றவாளியாக்கி 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தார். ஒவ்அவாரு குற்றச்சாட்டிற்கும் ரூபா 3500.00 வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன்> செலுத்தத் தவறினால் 10மாத சதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்> குற்றப்பணமாக ரூபா 100000.00 விதிக்கப்பட்டதுடன் செலுத்தத் தவறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் திருமதி மயூரி உடவெல அவர்களினால் வழக்காடப்பட்டதுடன் பிரதிவாதி சார்பில் சனாதிபதி சட்டத்தரணி யூர். ஆர். டி சில்வா வழக்காடியமை குறிப்பிடத்தக்கது.