அட்டாளைச்சேனை கமத்தொழில் சேவை மத்திய நிலையத்தின்; அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் லதீப் அப்துல் கனி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலத்துங்க அவர்கள் இன்று (19/09/2019) 16 ஆண்டுகளும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலிகிதராக பணிபுரிந்த சுலைமான் லெப்பை முனாஸ் என்பவருக்கு 4 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அட்டாளைச்சேனை கமத்தொழில் சேவை மத்திய நிலையத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் லதீப் அப்துல் கனி என்பவர் 2015 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 16 ஆம் மாதம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் சம்சுதீன் முஹம்மத் அஜ்மான் என்பவருக்கு வயற்காணி ஒன்றினை அவரது பெயரில் மாற்றிக் கொடுப்பதற்கு ஊக்குதல் அல்லது வெகுமதி என்ற முறையில் ரூபா. 8000/= பணத்தினை அவாநிறைவாக முறைப்பாட்டாளரான அவரிடம் பரிந்து கோரியதுடன் அதனை தனது இலிகிதர் மூலம் பெற்றுக் கொண்டபோது ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவருக்கு ; ஒரு குற்றத்திற்கு 4 வருட வருடங்கள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் நான்கு கற்றச்சாட்டுக்களுக்கும் ஒன்றுக்கு ரூபா 5000.00 வீதம் ரூபா 20000.00 குற்றப்பணமாகவும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறினால் ஒரு குற்றத்திற்கு 1 வருடம் வீதம் மேலும் நான்கு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அத்துடன் இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளியான இலிகிதர் சுலைமான் லெப்பை முனாஸ் குற்றத்தினைப் புரிவதற்கு 1 வது குற்றவாளிக்கு உடந்தையாயிருந்து உதவியமையின் காரணமாக இலஞ்ச சட்டத்தின் 25(2) ஆம் பிரிவூடன் சேர்த்து வாசிக்கத்தக்க இலஞ்ச சட்டத்தின் 19 (ஆ)> (இ) பிரிவுகளின் பிரகாரம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா இரண்டு வருடங்கள் வீதம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தண்டனை காலம் ஒரேதடவையில் செல்லும் வகையில் நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
அத்துடன் இவ்வழக்கின் முறைப்பாட்டாளருக்;கு ரூபா 50000.00 இழப்பீடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை வழங்கத்தவறினால் மேலும் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன்> குறித்த வழக்கானது ஆணைக்குழுவின் சார்பில் சட்டப்பிரிவின் உதவிப்பணிப்பாளரான சால்தீன் முஹம்மட் சப்ரி அவர்களினால் முன்னெடுக்கப்பட்டதுடன் பிரதிவாதிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி திரு அசோக்க வீரசு+ரிய அவர்கள் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.