இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, ரூபா 4000.00 நிதியை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொள்ளும் குற்றச்சாட்டடிற்கு அமைய, ஹகுரன்கெத பிரதேச செயலக அலுவலகத்தின் வர்த்தக பிரிவின் அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் 2022.02.14 ஆம் திகதி இலஞ்ச அல்லது குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தியோகத்தரினால் கைது செய்யப்பட்டார்.
வர்த்தகப் பெயரை மறுசீரமைத்து, வர்த்தக பதிவு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு தேவiயான செயற்பாடுகளை மேறகொள்வதற்காக சந்தேக நபரான உத்தியோகத்தரினால் இவ் இலஞ்ச பணம் பெற்றுக் கொள்ளும் வேளையில் ஹகுரன்கெத நகரின் பொத்குள் மாளிகா ரஜமஹா விஹரைக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டார்.








