இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துடன் இணைந்ததான கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடந்த 2019 ஜுன் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் திருமதி எஸ். ஐ. ஜயசிங்க, திருமதி துஷ்மன்தி ராஜபக்ஸ உதவிப்பணிப்பாளர் (சட்டம்)> திரு எஸ். எம். சப்ரி (உதவிப்பணிப்பாளர் (சட்டம்) மற்றும் எம். ரிஸ்வான் (வளவாளர்>NILET) திரு. கிருஷாந்த் (நிலையப் பொறுப்பதிகாரி) மன்னார் பொலிஸ் நிலையம்> ஆகியோர் கலந்து கொண்டனர்.
வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற 'நேர்மையான தேசத்தை உருவாக்க ஒன்றிணைவோம்' எனும் மேற்படி நிகழ்வில் வடமாகாண கல்வித்துறை உயர் அதிகாரிகள்> வலய> கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள்> அதிபர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளடங்களாக சுமார் 120 பேர் பங்குபற்றிய நிகழ்வு தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.