கந்தளாய் சீனித் தொழிற்சாலையை முன்னெடுத்து செல்வதற்காக அதன் இடப்பரப்பில் கட்டடத்துடனான உபகரணங்களை எவ்வித இடயூறும் இன்றி இந்தியப்பிரஜையான கொட்டஹரலாகல்லி பேதப்பபையா நாகராசா என்வருக்கு வழங்குவதற்காக அவரிடம் இருந்து ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பரிந்து கோரி பெற்றுக் கொண்ட சந்தர்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி இந்திகெட்டிய ஹேவகே குசும்தாஸ மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியதாச திசநாயக்க ஆகியோருக்கு எதிராக நிரந்த நீதாய மேல் நீதிமன்றில்
வழக்கு இலக்கம் 01/04/2019 இன் கீழ் 2019.06.20 ஆம் திகதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 08.07.2019 அன்று 1 ஆம் இலக்க நிரந்த நீதாய மேல் நீதிமன்றில அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.