இலங்கை சுங்கத்தில் அனுமதி பெறப்படாத 400க்கு அண்மித்த வாகனங்களை சட்ட விரோதமாக பதிவு செய்து மோட்டார் வாகன திணைக்களத்தின் தரவு அமைப்பிற்குள் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நீதிமன்றத்திற்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவ்வாகனங்களில் 168 வாகனங்களின் இடமாற்றத்தை நிறுத்துமாறு நீதிமன்றத்தினால் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அவ்வாறு உத்தரவிடப்பட்ட 168 வாகனங்களில் 6 வாகனங்களை 2024.06.05 மற்றும் 2024.06.06 தினங்களில், ஆணைக்குழுவானது குறித்த வாகனங்களின் தற்போதைய உரிமையாளர் களிடமிருந்து ஆணைக்குழுவின் பொறுப்பில் எடுத்தது. (குறித்த வாகனங்களின் நிழற்படங்களை கீழுள்ள இணையத்தள முகவரியில் காணலாம்.
https://sinhala.ciaboc.gov.lk/media-centre/latest-news/1122-2024-06-08-06-11-33
இந்த 6 வாகனங்களினால் அரசுக்கு 10 கோடி ரூபாய்க்கு அண்மித்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முடித்து அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.