இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய ரூ. 22,000/- இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கட்டிடத் திணைக்களத்தில் கடமையாற்றும் ஆரம்பநிலை அரை-தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரையும், குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2023.02.16 ஆம் திகதி கைது செய்துள்ளனர். மற்றும் லொத்தர் விற்பனையாளர்ஒருவரும், யாட்டல் சிம் விற்பனையாளர் ஒருவரும் மேற்குறிப்பிட்ட இலஞ்சத்தை பெறுவதற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.