ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் பிரகாரம் லங்கா சதொச நிலையத்திற்கு விதிமுறைகளை பின்பற்றாது சுமார் 14,000 கரம்போர்ட் (Carom board) மற்றும் 11,000 டாம்போர்ட் (daam Board) முதலானவற்றை கொள்வனவு செய்தமை மற்றும் விளையாட்டுப் பொருட்களை விளையாட்டு அமைச்சிற்கு தொடர்பல்லாத செயற்பாடொன்றை மேற்கொள்வதற்காக ரூபா 53 மில்லியன்கள் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவ ஆகியோருக்கு எதிராக 3 பேரடங்கிய 2 ஆம் இலக்க நீதாய மேல் நீதிமன்றில் HC/PTB/2/2/2019 எனும் வழக்கிலக்கத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனத்தை நடாத்தி வந்ததுடன், குறித்த நிறுவனத்தின் லீசிங் செய்யப்பட்ட வாகனங்களை தரித்து வைக்கும் கட்டத்திற்கு சட்ட விரோதமாக மின் இணைப்பினை பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ஹோமாகம பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தின் அலுவலர் ஒருவர் ரூபா 100,000.00 இனை இலஞ்சமாக கோரி அதனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.06.20 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை மகாவலி அதிகார சபைக்குற்பட்ட வெஹரகல தென்ன பிரிவின் நாமல் கம பிரதேசத்தின் காணித்துண்டொன்றை முறைப்பாட்டாளரின் மகளின் பெயரிற்கு மாற்றிக் கொடுப்பதற்கு அவசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முறைப்பாட்டாளரிடம் ரூபா 5000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலங்கை மகாவலி அதிகார சபையின் வெஹரகல தென்ன பிரிவின் போகஸ்வெவ பிரிவு முகாமையாளர் 2019.05.09 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அங்கத்தவர் என சந்தேகிக்கப்படுபவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தாக்கல் செய்யாது விடுதலை செய்து கொள்வதற்கு உதவிபுரியுமாறு கோரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 500,000.00 இனை இலஞ்சமாக வழங்குவதாக கூறி அதில் ரூபா 250,000.00இனை இலஞ்சமாக வழங்கிய போது, அப்பணத்தொகையை வழங்கிய நபரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.
2018 ஆம் ஆண்டிற்கான பயிர்நில இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பத்திருந்த முறைப்பாட்டாளரிடம்,பக்கமூன விவசாய மத்திய நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் மற்றும் பொலன்னறுவை விவசாய காப்புறுதி மையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரும் ரூபா 58000.00 இனை இலஞ்சமாக கோரி அதனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.03.27 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் இருவரினையும் கைது செய்தனர்.
கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த மூன்று பொலிஸ் அலுவலர்கள் முறைப்பாட்டாளரிடம் ரூ. 20000.00 இலஞ்சமாக கோரி அதில் ரூபா 10000.00 இனை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ சம்பத் விஜேரத்ன அவர்கள் மூவரையும் குற்றவாளிகளாக்கி தீரப்பளித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில் முறைப்பாட்டாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதிருப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் ரூபா 513500.00 பெற்றுக் கொண்ட நிலையில் பின்பு முறைப்பாட்டாளரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி, நீதிபதிக்கு வழங்குவதற்காக எனக் கூறி மேலும் ரூபா 100000.00 இனை கோரி அதில் ரூபா 20000.00 இனை முதலில் பெற்றுக் கொண்ட நிலையில் எஞ்சிய ரூபா 80000.00 இனை 2019.03.08 ஆம் திகதி கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் அலுவலரினை கைது செய்தனர்.
கைது செய்யப்படட நபர் வெல்லவாய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தன்னுடைய இரத்த மாதிரியை மாற்றுவதற்காக ரூபா 90000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குறித்த நபரின் இரத்த மாதிரியை அரசபகுப்பாய்வாளருக்கு அனுப்பி, டி. என். ஏ பரிசோதணை மூலம் குழந்தையொன்றின் தந்தைமையை உறுதி செய்வதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சந்தர்பத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் ஏலவே நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது இரத்த மாதிரியை ஏலவே வழங்கியிருந்த நிலையில் அதனை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப ஏற்பாடாகி இருந்த சந்தர்பத்தில், தன்னுடைய இரத்தமாதிரிக்கு பதிலாக வேறொருவரின் இரத்த மாதிரியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ரூபா 90000.00 இனை இலஞ்சமாக வழங்கிய சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் மொனராகலை மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து 2019.03.07 கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் நிலையமொன்றினால் கைது செய்யப்பட்ட கெப் ரக வாகனமொன்றை நீதமன்றத்திற்கு முன்வைத்த பின், விடுவிப்பதற்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காது அலுவலர்கள் மூலமாக விடுவித்துக் கொடுப்பதற்காக ரூபா 10000.00 இனை முறைப்பாடடளரடமிருந்து இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் 2019.03.06 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.
2019 அம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவரொருவரை அனுமதிப்பதற்காக தென் மாகாணத்தின் தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் ஒரவரின் மூலம் முறைப்பாட்டாளரிடம் ரூபா 15000.00 இனை இலஞ்மாக கோரி அதில் அதில் 7000.00 இனை பெற்றுக் கொண்டமையின் பின், எஞ்சிய தொகையை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த அதிபரினை கைது செய்தனர்.
காணியின் மேட்டுப்பகுதியை வெட்டி 85கியுப் மண்ணை அகற்றுவதற்கான போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை தயாரித்து அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கு உதவி செய்வதாக கூறி ரூபா 10000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 5000.00 இனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.02.28 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அலுவலக உதவியாளரினை கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954