சுகாதார அமைச்சின் முகாமைத்துவ உதவியாளராக சேவையாற்றிய உத்தியோகத்தர் வைத்திய நிபுணர் ஒருவரின் வெளிநாட்டு விடுமுறை காலத்திற்கு உரிய சம்பளத்தை தயாரித்து வழங்குவதற்காக ஊக்குவிப்பாக அல்லது வெகுமதியாக ரூபா 20,000.00 பணத்தை கோரி அதனைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், குற்றவாளி குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 4 குற்றச் சாட்டுக்களையும் ஏற்றுக் கொண்டார். ஒரு குற்றத்திற்கு 6 மாத காலங்கள் வீதம் கடுழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதனை 5 வருடகாலத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் ஒரு குற்றத்திற்காக ரூபா 5,000.00 வீதம் 04 குற்றங்களுக்காக ரூபா 20,000.00 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இலஞ்சமாகப் கோரப்பட்ட ரூபா 20,000.00 பணத்தை தண்டப் பணமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற இலக்கம் 05 இன் கௌரவ நீதிபதி மஞ்சுல திலகரத்னவினால் 2021.03.23 ஆம் திகதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.