ஐ.நா. தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் 15 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பொது சபையின் உயர் நிலை விவாதத்தில் இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு. சரத் ஜயமன்னே அவர்களின் உரை.வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் மாநாட்டின் செயல்பாட்டை திறம்பட ஊக்குவித்தல்
மகாவலி அதிகாரசபையின் கல்கிரியாகம பிரிவு முகாமையாளராக பணிபுரிந்த ஏ. எம். உபாலி திசாநாயக்க என்பவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களின் மூலம் 5 வருட கடூழிய சிறை, ரூபா 10,000.00 தண்டம், பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு 200,000.00இழப்பீடு வழங்குமாறு விதித்துத் தீர்ப்பு.
கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் 15000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட அநுராதபுர இறைவரி திணைக்களத்தின் முன்னாள் உள்நாட்டு இறைவரித்திணைக்கள உத்தியோகத்தருக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
கௌரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட வெயங்கொடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.
மதுகம பிரதேச சபையின் தொழில் நுட்ப அலுவலருக்கு ரூபா 24000.00 தண்டம் மற்றும் 2 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
சனாதிபதி செயலக தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் பீ. திசாநாயக்க ஆகியோர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி கட்டளைப் பிறப்பித்தார். கலாநிதி குசும்தாச மஹாநாம இதற்கு முன் காணி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்களின் செயலாளராக பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான தேசிய செயல் திட்டத்தினை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான தேசிய செயல் திட்டத்தினை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
காணி உத்தியோகத்தர் மற்றும் மகாவலி அதிகாரசபையின் கள உதவியாளரும் கடமை நிறைவேற்று நிலைய முகாமையாளருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு
நாவுல பிரதேச செயலாளருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
மதுகம பிரதேச சபையின் வெலிபன்ன உப காரியாலயத்தில் தொழில் நுட்ப அலுவலராக பணி புரிந்த ஊழியர் ஒருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 16 மாத கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூபா 24000.00 தண்டம் விதித்துத்தீர்ப்பு.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954