கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருக்கு ரூபா 1000.00 தண்டப்பணம் அறவீடு.
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருக்கு ரூபா 1000.00 தண்டப்பணம் அறவீடு.
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருக்கு ரூபா 1000.00 தண்டப்பணம் அறவீடு.
2017.10.25 திகதி அரச வங்கியுடன் இணைந்து காப்புறுதி நிலையத்தின் தற்காலிக மதிப்பீட்டாளர் ஒருவர் மூலம் விபத்திற்குற்பட்ட தனியார் பேரூந்தின் இழப்பீட்டுக் காப்புறுதியினை பெற்றுக் கொள்வதற்கான மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து வழங்குவதற்கு, ரூபா 5000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் தற்காலிக மதிப்பீட்டாளரை கைது செய்தனர்.
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவருக்கு ரூபா 2500.00 வீதம் தண்டப்பணம் அறவீடு.
கெகிராவ பொலிஸ் நிலையத்தின் பணிபுரியும் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
2017 ஆம் ஆண்டில் வாக்காளர் இடாப்பில் பெயரினை உள்ளீர்ப்பதற்கும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கும் அவசிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு 2017.10.23 திகதி திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவில் சேவை புரியும் கிராம சேவகர் மற்றும் அவருக்கு உதவி செய்த இன்னுமொரு நபரொருவரின் மூலம் ரூபா 25,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கிராம சேவகரை கைது செய்தனர்.
சம்மாந்துறை விவசாய சேவை நிலையத்தின் விவசாய அபிவிருத்தி அலுவலர் மற்றும் அரச முகாமைத்துவ உதவியாளருக்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் ரூபா 5000.00 தண்டம்.
கரகஸ்தென்ன கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகருக்கு ரூபா 10000.00அபராதம்.
ரூபா 1000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய அலுவலக ஊழியரை கைது செய்தமை. 2017 ஒக்டோபர் 12
2017.10.12 ஆம் திகதி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற சிறியரக லொறி ஒன்றின் வாகன இலக்க தகட்டினை வழங்குவதற்குரிய வேலைகளை பூர்த்தி செய்து கொடுப்பதன் நிமித்தம் அவ்வலுவலகத்தின் பெண் அலுவலக ஊழியர் மூலம் ரூபா 1000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் அலுவலக ஊழியரை கைது செய்தனர்.
2017.10.11 ஆம் திகதி முறைப்பாட்டாளர் மூலம் மடுல்ல பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு சொந்தமான பாதையை அபிவிருத்தி செய்வதற்காக அப்பிரதேச விவசாய அமைப்பின் மூலம் பெற்றுக் கொண்ட ஒப்பந்ததினை நிறைவு செய்து ஒப்பந்தப் பணத்தினை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான பற்றுச்சீட்டுக்களை தயாரித்து ஒப்பந்த பணத்தினை வழங்குவதறகான பரிந்துரையை வழங்குவதன் நிமித்தம் ஒப்பந்த மதிப்பீட்டு தொகையின் 3 வீதத்தினை அதாவது ரூபா 15000.00 இணையும் பற்றுச் சீட்டுக்களை தயாரிப்பதற்கான கட்டணமாக ரூபா 3000.00 உம் அடங்கலாக ரூபா 18000.00 இனை அலுவலக தொழில் நுட்ப அலுவலர் இலஞ்சமாகப் கேட்டு பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டார்.
2017.10.04 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவுப்புத்தகத்தின் பிரதியொன்றினை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலர்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான வேலைகளை செய்வதற்கு முதலாவது சந்தேக நபரான தரகர் ரூபா 2000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்டதுடன் வெளியாளான இரண்டாவது சந்தேக நபர் மூலம் மேற்படி செயற்பாட்டை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலர்கள் மூலம் ரூபா 2000.00 இனை இலஞ்சமாக கையளிக்கும் போது அவ்விரு நபர்களையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; அதிகாரிகள் கைது செய்தனர்.
கனடாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ரூபா 500,000.00 அவாநிறைவாகக் கோரி அதில் ரூபா 300,000.00 இனைப் பெற்றுக் கொண்டவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954