இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விழிப்பூட்டல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்கள்> தம்பலகாமம் பிரதேச செயலாளர் மற்றும் குறித்த பிரிவின் கிராம சேவகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.




இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துடன் இணைந்ததான கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடந்த 2019 ஜுன் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு CaFFE அமைப்புடன் இணைந்து நத்தும் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஹட்டன் நகரில் 09.07.2019 மு. ப 9.00 நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றது. ஆணைக்குழுவின் சார்பில் திருமதி மயூரி உடவெல (பிரதிப்பணிப்பாளர் நாயகம்) அநுராதா சிரிவர்தன (உதவிப்பணிப்பாளர் சட்டம்) ஆகியோர் கலந்து விரிவுரைகளை வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்ட தொடரில் அரசாங்க அலுவலர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு கடந்த 28.06.2019 அன்று அநுராதபுரத்தில் வடமத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வினை ஆணைக்குழுவின் அலுவலர்கள் முன்னெடுத்தனர்.
கனடாவின் ஒட்டாவ நகரில் 2019 மே மாதம் 29-31 வரை நடைபெற் திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் CIABOC இன் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரிணி சரத் ஜயமான்ன அவர்கள் இலங்கை குழுவை பிரதிபலிக்கும் வகையில் கலந்து சிறப்பித்தார். இலங்கையின் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்ற வகையிலும், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான விதிகளின் அடிப்படையில் முன்னெடுக்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த அலுவலராக சனாதிபதியின் செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே, இலங்கையியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


