கஹவத்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ விகும் கலுஆரச்சி அவர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.
கஹவத்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ விகும் கலுஆரச்சி அவர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்னே அவர்கள் தெரண தொலைக்காட்சியின் 24*7 நிகழ்ச்சியினூடே இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் - 2019-2023 எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடுதல் தொடர்பான விஷேட நேர்காணலில் கடந்த வாரம் பங்குபற்றினார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில் முறைப்பாட்டாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதிருப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் ரூபா 513500.00 பெற்றுக் கொண்ட நிலையில் பின்பு முறைப்பாட்டாளரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி, நீதிபதிக்கு வழங்குவதற்காக எனக் கூறி மேலும் ரூபா 100000.00 இனை கோரி அதில் ரூபா 20000.00 இனை முதலில் பெற்றுக் கொண்ட நிலையில் எஞ்சிய ரூபா 80000.00 இனை 2019.03.08 ஆம் திகதி கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் அலுவலரினை கைது செய்தனர்.
நாடொன்றின் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான கொள்கைத்திட்டம் காணப்படுதல் வேண்டும். அக்கொள்கையானது திட்டமாக ஒட்டு மொத்த மக்களிடத்தும் வெளிப்படுத்தப்படல் வேண்டும். அச்சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்நிலைமையினை 2015இல் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் 2017 ஒக்டோபர் மாதமளவில் புரிந்து கொண்டமையின் வெளிப்பாட்டினால் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தினை தயாரிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
கைது செய்யப்படட நபர் வெல்லவாய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தன்னுடைய இரத்த மாதிரியை மாற்றுவதற்காக ரூபா 90000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குறித்த நபரின் இரத்த மாதிரியை அரசபகுப்பாய்வாளருக்கு அனுப்பி, டி. என். ஏ பரிசோதணை மூலம் குழந்தையொன்றின் தந்தைமையை உறுதி செய்வதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சந்தர்பத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் ஏலவே நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது இரத்த மாதிரியை ஏலவே வழங்கியிருந்த நிலையில் அதனை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப ஏற்பாடாகி இருந்த சந்தர்பத்தில், தன்னுடைய இரத்தமாதிரிக்கு பதிலாக வேறொருவரின் இரத்த மாதிரியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ரூபா 90000.00 இனை இலஞ்சமாக வழங்கிய சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் மொனராகலை மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து 2019.03.07 கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் நிலையமொன்றினால் கைது செய்யப்பட்ட கெப் ரக வாகனமொன்றை நீதமன்றத்திற்கு முன்வைத்த பின், விடுவிப்பதற்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காது அலுவலர்கள் மூலமாக விடுவித்துக் கொடுப்பதற்காக ரூபா 10000.00 இனை முறைப்பாடடளரடமிருந்து இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் 2019.03.06 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.
2019 அம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவரொருவரை அனுமதிப்பதற்காக தென் மாகாணத்தின் தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் ஒரவரின் மூலம் முறைப்பாட்டாளரிடம் ரூபா 15000.00 இனை இலஞ்மாக கோரி அதில் அதில் 7000.00 இனை பெற்றுக் கொண்டமையின் பின், எஞ்சிய தொகையை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த அதிபரினை கைது செய்தனர்.
காணியின் மேட்டுப்பகுதியை வெட்டி 85கியுப் மண்ணை அகற்றுவதற்கான போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை தயாரித்து அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கு உதவி செய்வதாக கூறி ரூபா 10000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 5000.00 இனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.02.28 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அலுவலக உதவியாளரினை கைது செய்தனர்.
வலவ முரவெசிஹேன மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான இடத்தை முறைப்பாட்டாளரின் மனைவியின் பெயரிற்கு முறைப்பாட்டாளரிடம் ரூபா 15000.00 இனை இலஞ்மாக கோரி அதில் அதில் 5000.00 இனை 2019.02.26 அன்று பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த நபரினை கைது செய்தனர்.
கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் வெலிக்கடை பொலிசாரினால் கைது செய்வதற்கு தேடப்பட்டு வந்த நபரினை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்காதும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதும் சமாதானமாகபொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு கோரி அதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 25000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் 2019.02.25 அன்று கைது செய்யப்பட்டார்.
2019.02.27 ஆம் திகதியன்று மேற்படி நேர்முகப்பரீட்சை நடைபெறும் என விண்ணப்பதாரிகளுக்கு அழைப்புக்கடிதங்கள் அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் 10 வது சர்வதேச ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களின் பொதுக் கூட்டத்தில் 2019 ஜனவரி மாதம் 22-24 திகதிகளில் ஒஸ்த்திரியா நாட்டின் வியன்னா நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது பெற்றுக் கொண்ட புகைப்படங்கள் வருமாறு.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954