இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் பிரகாரம் லங்கா சதொச நிலையத்திற்கு விதிமுறைகளை பின்பற்றாது சுமார் 14,000 கரம்போர்ட் (Carom board) மற்றும் 11,000 டாம்போர்ட் (daam Board) முதலானவற்றை கொள்வனவு செய்தமை மற்றும் விளையாட்டுப் பொருட்களை விளையாட்டு அமைச்சிற்கு தொடர்பல்லாத செயற்பாடொன்றை மேற்கொள்வதற்காக ரூபா 53 மில்லியன்கள் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவ ஆகியோருக்கு எதிராக 3 பேரடங்கிய 2 ஆம் இலக்க நீதாய மேல் நீதிமன்றில் HC/PTB/2/2/2019 எனும் வழக்கிலக்கத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு CaFFE அமைப்புடன் இணைந்து நத்தும் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஹட்டன் நகரில் 09.07.2019 மு. ப 9.00 நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றது. ஆணைக்குழுவின் சார்பில் திருமதி மயூரி உடவெல (பிரதிப்பணிப்பாளர் நாயகம்) அநுராதா சிரிவர்தன (உதவிப்பணிப்பாளர் சட்டம்) ஆகியோர் கலந்து விரிவுரைகளை வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்ட தொடரில் அரசாங்க அலுவலர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு கடந்த 28.06.2019 அன்று அநுராதபுரத்தில் வடமத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வினை ஆணைக்குழுவின் அலுவலர்கள் முன்னெடுத்தனர்.
கனடாவின் ஒட்டாவ நகரில் 2019 மே மாதம் 29-31 வரை நடைபெற் திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் CIABOC இன் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரிணி சரத் ஜயமான்ன அவர்கள் இலங்கை குழுவை பிரதிபலிக்கும் வகையில் கலந்து சிறப்பித்தார். இலங்கையின் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்ற வகையிலும், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான விதிகளின் அடிப்படையில் முன்னெடுக்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த அலுவலராக சனாதிபதியின் செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே, இலங்கையியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


