2023.01.13 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய 2 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மாவனல்ல பிரதேச சபையின் தவிசாளரையும் மற்றும் அங்கு கடமையாற்றும் சாரதி ஒருவரையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.








