இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொரல்லை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அலுவலர் ஒருவரை, பொது இடத்தில் மது அருந்தியதாக கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக ரூபா 2000.00 இனை முறைப்பாட்டளரடமிருந்து இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் 2019.11.08 ஆம் திகதி அன்று கைது செய்தனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்க்கான ஆணைக்குழுவின் கல்வி நிவாரண பிரிவினால் நேர்மையான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை விழிப்புணர்வூட்டும் வகையிலான நிகழ்ச்சித்திட்டத் தொடரில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான நிகழ்ச்சி விக்னேஸ்வரா கல்லூரியில் 20.09.2019 அன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் நண்பகல் வரை சிறப்பாக நடைபெற்றது.
முறைப்பாட்டாளரின் பிள்ளையை தரம் 7 இற்கு உள்ளீர்ப்பதற்கு அவசிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் நிமித்தம் யாழ்ப்பாணம் இந்து ஆண்கள் கல்லூரியின் அதிபர் ரூபா 100,000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 50,000.00 இனை ஆரம்பத்தில் இலஞ்சமாக முறைப்பாட்டாளரிடமிருந்து பெற்றுக் கொண்ட நிலையில், எஞ்சிய ரூபா 50,000.00 இலஞ்சமாக முறைப்பாட்டாளரிடமிருந்து கோரி அப்பணத்தை 2019.09.20 அன்று ஆணைக்குழுவின் உபாய அலுவலர் முன்னிலையில் பெற்றுக் கொண்ட நிலையில் மேற்படி பாடசாலையின் அதிபர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர் பிரதேச செயலகத்திற்குற்பட்ட பொதுமக்களுக்கான இலஞ்ச ஊழல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு காரைநகர் பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 19.09.2019 வியாழக்கிழமை மு. ப. 10.30 மணி முதல் பி. ப 1.00 மணி வரை நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர்; திருமதி உஸாஇ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன்இ யாழ் மாவட்ட கபே அமைப்பின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி; அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பிலும் கபே அமைப்பின் பணிப்பாளர் தேர்தல் சட்டம் தொடர்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இலஞ்ச ஊழல் மற்றும் தேர்தலின் போதான ஊழல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு யாழ்பாண மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 18.09.2019 புதன்கிழமை மு. ப. 9.00 மணி முதல் பி. ப 1.30 மணி வரை நடைபெற்றது. உதவி மாவட்ட செயலாளர்; திருமதி கிருஷாந்தி, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி, யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளர் திரு. அமல் ராஜ் மற்றும் அனுசரணையாளர்களான East West முகாமைத்துவ அமைப்பின் திரு மார்க், சட்டத்தரணி இந்திக பெரேரா மற்றும் கபே அமைப்பின் உறுப்பினர்களும் பங்குபற்றினர்.
முறைப்பாட்டாளரான பெண்மணியின் பிள்ளையை தரம் 8 இற்கு உள்ளீர்ப்பதற்கு அவசிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் நிமித்தம் முற்பணமாக ரூபா 10000.00 இனை கோரி அதில் ரூபா 8000.00 இனை சட்டவிரோதமாக இலஞ்சமாக முறைப்பாடடளரடமிருந்து கோரி அப்பணத்தை 2019.09.20 அன்று பெற்றுக் கொண்ட நிலையில் மொரட்டுவை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் காவலாளி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
அட்டாளைச்சேனை கமத்தொழில் சேவை மத்திய நிலையத்தின்; அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் லதீப் அப்துல் கனி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலத்துங்க அவர்கள் இன்று (19/09/2019) 16 ஆண்டுகளும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலிகிதராக பணிபுரிந்த சுலைமான் லெப்பை முனாஸ் என்பவருக்கு 4 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அம்பாறை நில ஆணையாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்ட கள பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய நபரொருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு விகும் களுஆரச்சி அவர்களினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.
இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான'பயிற்றுவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி' ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் உதவியுடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) கடந்த ஆகஸ்ட் மாதம் 23 – 25ஆம் திகதிகளில்ஹெரிடன்ஸ் - நீர்கொழும்பு(HERITANCE- NEGOMBO) USAID நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கௌரவ ரஞ்சித் லால் சில்வா, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் கௌரவ நீதிபதி யசந்த கோதாகொட, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றடியார் தலைமை அதிபதி சனாதிபதி சட்டத்தரணி செல்வி அயேஸா ஜினசேன, பிரதி மன்றடியார் தலைமை அதிபதி திரு துஸித் முதலிகே, சிரேஸ்ட சட்டத்தரணி ஹர்சன நானயக்கார, முதலானோரும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்ரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களும் வளவாளர்களாக கலந்து சிறப்பித்ததுடன் ஆணைக்குழுவின் சட்டத்துறை அலுவலர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
பொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகர் ஒருவரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் ரூபா 10,000.00 தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பபளித்தது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954