கௌரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட வெயங்கொடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.
கௌரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட வெயங்கொடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.
மதுகம பிரதேச சபையின் தொழில் நுட்ப அலுவலருக்கு ரூபா 24000.00 தண்டம் மற்றும் 2 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
சனாதிபதி செயலக தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் பீ. திசாநாயக்க ஆகியோர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி கட்டளைப் பிறப்பித்தார். கலாநிதி குசும்தாச மஹாநாம இதற்கு முன் காணி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்களின் செயலாளராக பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான தேசிய செயல் திட்டத்தினை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான தேசிய செயல் திட்டத்தினை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
காணி உத்தியோகத்தர் மற்றும் மகாவலி அதிகாரசபையின் கள உதவியாளரும் கடமை நிறைவேற்று நிலைய முகாமையாளருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு
நாவுல பிரதேச செயலாளருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
மதுகம பிரதேச சபையின் வெலிபன்ன உப காரியாலயத்தில் தொழில் நுட்ப அலுவலராக பணி புரிந்த ஊழியர் ஒருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 16 மாத கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூபா 24000.00 தண்டம் விதித்துத்தீர்ப்பு.
தொழிலாளர் திணைக்களத்தின் பதுள்ளை மாவட்ட தொழிலாளர் காரியாலயத்தில் தொழிலாளர் கள அலுவலராக சேவை செய்த ஊழியர் ஒருவருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 16 மாத கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூபா 24000.00 தண்டம் விதித்துத்தீர்ப்பு.
கௌரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரூபா 2000.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வெயங்கொடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத்தீர்ப்பு.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் முறைப்பாட்டாளர் காத்திருந்த வேலை அவரை பரிசோதித்து அவர் சட்டவிரோத நடவடிக்கையினை மேற்கொள்ள வந்தார் என குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ரூபா 20000.00 கோரி, முறைப்பாட்டாளரின் கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை பொலிஸ் அலுவலர் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டதுடன் முதலில் ரூபா 10,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு முறைப்பாட்டாளருக்கு கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை மீள ஒப்படைக்கும் போது பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் கான்ஸ்டபல் 74317 ஆன கீகியனகே நிலூக பெரேரா என்பவரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இவ் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2018.04.09 ஆம் திகதி கைது செய்தனர்.
2018.04.05 ஆம் திகதி முறைப்பாட்டாளரின் சுவர்ன பூமி உறுதியின் மூலம் அளிக்கப்பட்ட காணியில் சிலகாலம் விவசாயம் மேற்கொள்ளப்படாமையினால் உருவாகிய பற்றைக்காடுகளை அகற்றி குறித்த நிலத்தினை சுத்தம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு கையளித்த கடிதத்திற்கு அனுமதியை வழங்கவதற்கு ரூபா 10,000.00 இனை கோரி பின்னர் அதனை ரூபா 5000.00 ஆக குறைத்து அதனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கிராம சேவகரை கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954