பாடசாலையொன்றிற்கு தரம் 01 இல் மாணவி ஒருவரை அனுமதிப்பதற்கு ரூபா 40,000.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட அதிபர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
பாடசாலையொன்றிற்கு தரம் 01 இல் மாணவி ஒருவரை அனுமதிப்பதற்கு ரூபா 40,000.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட அதிபர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
பொறியியலாளரின் உதவியாளருக்கு ரூபா 1.2 மில்லியன் தண்டம் விதித்து தீர்ப்பு.
முறைப்பாட்டாளர் போலி கார் ஒன்றினை பயன்படுத்தியமை மற்றும் போலி நாணயத்தாள் பயன்பாட்டுடனும், வெள்ளை சந்தணம் 3 கிலோகிராமினை உடமையில் வைத்திருந்தமையுடன் தொடர்பிலும் கைது செய்து மஹபாகே பொலிஸ் நிலையத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த காரினை உரிமையாளருக்கு விடுவித்துக் கொடுப்பதற்கான அவசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரூபா10000.00 கோரி அதில் ரூபா 2000.00 முன்பு பெற்றுக்கொண்ட நிலையில் எஞ்சிய தொகையான ரூபா 8000.00 இனை பெற்றுக் கொண்டசந்தர்ப்பத்தில் மஹபாகே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரினை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் 2018.03.05 ஆம் திகதி கைது செய்தனர்.
தெஹிவெல கல்கிஸ்ஸை மாநகர சபையில் பணியாளராக சேவைபுரியும் முறைப்பாட்டாளருக்கு வழங்கப்படவேண்டிய 2018 ஆண்டின் சனவரி மாதத்திற்கான மேலதிக நேர கொடுப்பணவை வழங்குவதற்கும் எதிர்வரும் மாதங்களின் மேற்படி கொடுப்பணவை எவ்வித காலதாமதமுமின்றி வழங்குவதற்கும் உரிய அவசிய ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி ரூபா 4000.00 இனை இலஞ்சமாகப் கேட்டு பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் தெஹிவெல கல்கிஸ்ஸை மாநகர சபையின் கைத்தொழிற்றுரை நிர்வாகி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூலம் 2018.02.28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
முறைப்பாட்டாளரான பெண்மணியினால் வென்னப்புவ பொலிஸ் பிரிவில் ஆயர்வேத ஸ்பா நிலையத்தினை எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாதாந்தம் 40,000.00 ரூபாவினைக் கோரி, அத்தொகையினை 30,000.00ரூபாவாக குறைத்து அதனை 2018.02.27 ஆம் திகதி ஆணைக்குழுவின் உபாய அலுவலரான பெண்மணியின் முன்னிலையில்,இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட நிலையில் வென்னப்புவ பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரான கங்காரலாகே தயா தேசப்பிரிய பண்டார என்பவரினை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.
2018.02.08 ஆம் திகதி அரச காணி ஒன்றில் மரங்களை வெட்டி சுத்தம் செய்தமைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகள் முன்னெடுக்காதிருக்கும் வகையில் இதற்கு முன்பு இரு தடவைகள் ரூபா 70000.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் மேலும் குறித்த இடத்தினை சுத்தம் செய்வதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் முன்னெடுக்காதிருக்கும் வகையில் ரூபா 40000.00இனை பரிந்து கோரி பெற்றுக் கொண்ட நிலையில் வவுனியா நெடுங்கேணி வட்டார வன அலுவலகத்தின் வட்டார வன அலுவலர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
வரகாபொல பிரதேச சபையின் முன்னால் தவிசாளரான போபே ஆரச்சிலாகே சந்தன கீர்த்திசிரி விஜேதுங்க என்பவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மூலம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தனமல்வில பிரதேச சபையின் தொழில்நுட்ப அலுவலர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
காலி மஹமோதர வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இருவருக்கு நான்கு வருடங்கள் வீதம் 8 வருட சிறைத்தண்டனையுடன் தண்டப்பணம்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளரான நிசாந்த குணசேகர ஆகியயோருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த59720/01/16 எனும் இலக்க வழக்கானது தொழில் நுட்ப குறைபாடு காரணமாக 2018.01.19 ஆம் திகதி மீளப் பெறப்பட்டதுடன் அதே தினத்தில் ஏலவே மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லங்கா சnதhச தலைவராக பணிபுரிந்த ருவன்ஜீவ பெர்னாந்து ஆகிய குற்றவாளிகளுக்கு எதிராக B/87776/18 எனும் இலக்கத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டது. மற்றும் ருவன்ஜீவ பெர்னாந்து எனும் குறிக்கப்பட்ட இரண்டாவது சந்தேக நபருக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்து வாக்குமூலமளிக்கமாறும் நீதிவான் நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டது.
வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தில் பணிப்பாளர் சபை மற்றும் பணியாளர்கள் சிலரால் ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவருமான அப்துல் ஹமீட் மொஹமட் திலிப் நவாஸ் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரான பீட்டர் மொஹான் மைத்ரீ பீரிஸ் மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான மஹவிதானலாகே முனிதாஸ சார்லஸ் பெர்டினான்ந்து ஆகியோருக்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் 70 ஆம் பிரிவிற்கு அமைய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2018.01.17 ஆம் திகதி அக்கரைப்பற்று – மட்டக்களப்பு பாதையூடாக பயணிக்கும் பேரூந்துகளில் இருந்து ஒரு பணய தடவைக்கு கல்முனை பேரூந்துதரிப்பிடத்தில் நேரக்கணிப்பாளராக பணி புரிபவர், குறித்த இடத்தில் பேரூந்தினை நிறுத்தி வைப்பதற்கும் குறித்த பேரூந்தானது,பயணிக்கும் ஏனைய பேரூந்துகளில் இருந்து எவ்வித இடயூறுகளுமின்றி பபணிப்பதற்கான அவசிய ஏற்பாடுகளை செய்து தருவதற்காகவும்,கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பணிபுரியும் நேரக்கணிப்பாளர் ஒருவர் ரூபா 100.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்விசாரணை அதிகாரிகள் நேரக்கணிப்பாளரை கைது செய்ததுடன் அதே தினத்தில் அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954