தவிர்க்க முடியாத காரணங்களினால் புலனாய்வு உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சை, அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்> அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.




சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்றிறன் மிக்க மூன்றாவது கலந்துரையாடல் அமர்வு 2019 ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் 2019 ஜுலை மாதம் 19 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு CAFE அமைப்புடன் இணைந்து நடாத்தும் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஹட்டன் நகரில் 09.07.2019 பி. ப 2.00 பி. ப 4.00 மணி வரை நடைபெற்றது. ஆணைக்குழுவின் சார்பில் திருமதி மயூரி உடவெல (பிரதிப்பணிப்பாளர் நாயகம்) அநுராதா சிரிவர்தன (உதவிப்பணிப்பாளர் சட்டம்) ஆகியோர் கலந்து விரிவுரைகளை வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ( BMICH) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான பொது கணக்குகளில் சிறப்பான செயல்திறனை அடைந்த அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கள் விழாவில் ஆணைக்குழுவின் சார்பில் ஜனாதிபதியிடமிருந்து தங்க விருதைப் பெற்றுக் கொண்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான உத்தேச சட்ட வரைவு குறித்த பொது பங்குதாரர் ஆலோசனை SOCLAM இனால்; 2019 ஜூன் 25 ஆம் திகதி காலி ஹோட்டல் அமரியில் நடைபெற்றது.


