தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தின் மேல் மாகாண திட்டத்திற்கு இணையாக, 14.03.2025 அன்று அகலவத்தை பிரதேச சபையில் பணியாற்றும் 70 அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம்.
தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தின் மேல் மாகாண திட்டத்திற்கு இணையாக, 14.03.2025 அன்று அகலவத்தை பிரதேச சபையில் பணியாற்றும் 70 அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம்.
காலி மாநகர சபையின் 180 அதிகாரிகளின் பங்கேற்புடன், 2025 மார்ச் மாதம் 06 ஆம் திகதி மாநகர சபை வளாகத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது. காலி மாநகர சபையின் அலுவலக அடிப்படையிலான மற்றும் கள அதிகாரிகளை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இரண்டு அமர்வுகளாக நாள் முழுவதும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வளவ்வ பிராந்தியத்தில் செயற்படுத்தப்பட்ட மகாவலி மறுமலர்ச்சி வாரம் 'செல்வச் செழிப்பான தேசம் ஆழகான வாழ்வு' என்ற தொனிப்பொருளில் கடந்த 2025.03.10 முதல் 2025.03.16 காலப்பகுதியில் நடைபெற்றதுடன் அதன் 06 வது நாள் 2025.03.15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
குருநாகல், பௌத்தலோக மாவத்தை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட தனியார் காணிக்குரிய உறுதிக்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ. 50000/= ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வடமேல் மாகாண சபையின் மாகாண உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பணிபுரியும் மதிப்பீட்டு அதிகாரியான பெண்மணி ஒருவர், கடந்த 17.03.2025 அன்று பிற்பகல் 1.05 மணியளவில் மாகாண இறை வரி திணைக்கள அலுவலகத்தில் அவரின் அலுவலக மேசைக்கு அருகில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்;.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த தொடர் நிகழ்ச்சிகள்> ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் இணைப்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன் அத்தொடரில் இறுதி நிகழ்ச்சி 2025.03.11 அன்று ஆட்பதிவுத் தினைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் இதில் சுமார் 90 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அரசாங்க தொழிலை வழங்குவதாகக் கூறி, முறைப்பாட்டாளரிடமிருந்தும் ஏனைய மூவரிடமிருந்தும் ரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் திறந்த விசாரணைக்குப் பிறகு, 13.03.2025 அன்று காலை 7.30 மணியளவில் குட்டிகல, படலங்கல பகுதியில் இரண்டு பொதுமக்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த தொடர் நிகழ்ச்சிகள், ஆட்பதிவுத் திணைக்களம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சித் தொடரில் நான்காவது நிகழ்ச்சி 2025.03.36 அன்று ஆட்பதிவுத் தினைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதில் சுமார் 60 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொழும்பில் உள்ள அதன் தலைமையகத்தில் புதிய அறிவூட்டல் முயற்சியின் ஒரு பகுதியாக முதல் நிகழ்வாக ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு கடந்த மார்ச் 04 ஆம் திகதி நடாத்தியது. மேற்படி நிகழ்வில் அரசுக்குச் சொந்தமான போக்குவரத்து சேவை வழங்குநரின் நிறைவேற்றுத்தர அலுவலர்களுக்கான விழுமியம் சார் நிர்வாகம் குறித்த தெளிவூட்டலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மொரகஹகந்த பிராந்தியத்தில் செயற்படுத்தப்பட்ட மகாவலி மறுமலர்ச்சி வாரம் 'செல்வச் செழிப்பான தேசம் ஆழகான வாழ்வு' என்ற தொனிப்பொருளில் கடந்த 2025.02.24 முதல் 2025.03.02 வரையில் இலங்கை மகாவலி அதிகாரசபையின் மொரகஹகந்த பிராந்தியத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 120 அதிகாரிகளின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் நிறைவு நாள் 2025.03.02 “திருப்திகரமான சேவைக்காக ஊழியர் உற்பத்தித்திறன் தினம்” என்று பெயரிடப்பட்டதுடன் குறித்த தினத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மொரகஹகந்த மகாவலி அதிகார சபை கேட்போர் கூடத்தில், விஷேட இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரிகளான திருமதி உதேஷிகா ஜயசேகர, திரு.ஷம்மி ஸ்ரீPலால் தொட்டவத்த ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர். . இந்த நிகழ்ச்சியின் மூலம், இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் அதன் விளைவுகள், இலஞ்ச ஊழல் தொடர்பிலான கேள்வி பதில்கள் மற்றும புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நேர்மையான அரச சேவையின் உருவாக்கத்திற்காக அரசாங்க அலுவலர்களை விழிப்பூட்டி நடாத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்று மாத்தறை மாநகர சபையின் 50 உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 24.02.2025 அன்று மாத்தறை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.
கொழும்பு, இலங்கை - மார்ச் 4, 2025
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ அகியோ இசோமாடா அவர்கள் தனது குழுவினருடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவெல சந்திப்பு கடந்த 04.03.2025 மற்றும் ஆணைக்குழுவின் அலுவலர்களுடனான சந்திப்பு மார்ச் 4, 2025, கொழும்பில் உள்ள ஊஐயுடீழுஊ அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கும் இடையிலான தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) ஜனாதிபதியின் செயலகத்துடன் இணைந்து, தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பின் இறுதி வரைவை அறிமுகப்படுத்தவும், அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகார அலகுகளை (IAU) நிறுவவும் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் அமர்வை நடாத்தியது. இந்த அமர்வு அரச அதிகாரிகளை உணர்வு பூர்வமாக திறம்பட செயல்படுத்துவதற்கான கட்டமைப்பைச் செம்மைப்படுத்த அவர்களின் கருத்துக்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954