இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் “இலஞ்சமற்ற நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மாணவத்தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறையிம் அடுத்த கட்ட நிகழ்வுகள் பதுள்ளை தர்மதூத வித்தியாலயம், விஹாரமஹாதேவி மகளிர் வித்தியாலயம், சுஜாதா மஹா வித்தியாலயம், ஊவ மஹா வித்தியாலயம், தம்மானந்த மஹா வித்தியாலயம், உதயராஜ மஹா வித்தியாலயம், விஷாகா மகளிர் மஹா வித்தியாலயம் மற்றும் ராஹ{ல மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கும் அனுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் தேசிய பாடசாலை, வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர மஹா வித்தியாலயம், நிவந்தக சேதிய மஹா வித்தியாலயம், மிகிந்தலை மஹா வித்தியாலயம், தலாவ மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கும், குருனாகல் வயம்ப ரோயல் கல்லூரி, ஜனாதிபதி மகளிர் வித்தியாலயம், கொதலாவல மஹா வித்தியாலயம், லக்தாஸ் வித்தியாலயம், நிஸ்ஸங்க மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கும் நடத்தப்பட்டன.