விசேட மேல் நீதிமன்றத்தின் விசாரணையில் முன்னாள் ஜனாதிபதியின் தலைமைப்பணியாளர் ஐ. எச். கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் பீ. திசாநாயக்க ஆகிய இருவர்மீதும் முறையே 20 வருடம் மற்றும் 12 வருட கடூளிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) வரவேற்கிறது. மேற்குறித்த இருவரும் இந்திய வர்த்தகரிடமிருந்து 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை இலஞ்சமாகப் பெறுவதற்கு இணங்கி அதில் 20 மில்லியன் பணத்தை முற்பணமாகப் பெற்றுக் கொண்டமைக்காக குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.