இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 10,000 நிதியை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய நொச்சியாகம பிரதேச செயலக அலுவலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டு சேவையாற்றும் இலக்கம் 333> குசும்புர பிரிவின் கிராமசேவை உத்தியோகத்தர் 2022.09.22 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ரூ 50,000.00 நிதியை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும், யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய ஸ்ரீ லங்கா மாவட்ட அமைப்பாளர் மற்றும் சமாதான நீதிவான் (முழு நாட்டிற்கும்) ஆக செயற்படுபவர் 2022.09.06 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை
ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 5000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய காலி, கடவத்சதர பிரதேச செயலக அலுவலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ள கன்தேவத்த கிராம சேவை உத்தியோகத்தர் (பியதிகம கிராம சேவைப் பிரிவில் பதில் கடமையில் ஈடுபடும் கிராம சேவை உத்தியோகத்தர்) 2022.09.02 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தியோத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, ரூபா 4000.00 நிதியை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொள்ளும் குற்றச்சாட்டடிற்கு அமைய, ஹகுரன்கெத பிரதேச செயலக அலுவலகத்தின் வர்த்தக பிரிவின் அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் 2022.02.14 ஆம் திகதி இலஞ்ச அல்லது குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தியோகத்தரினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய 5000.00 நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய, பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விN~ட (போதனா) சிறுவர் வைத்தியசாலையில் சேவையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் 2022.02.14 ஆம் திகதி இலஞ்ச அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய ரூபா 25000.00 நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய தலைமன்னார் மாவட்ட புலனாய்வு சேவைப் பணியகத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் 2022.02.02 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மே.கம்.தக்சிலா கல்லூரியின் அதிபர் 2021.12.23 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த வனாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் அத்தியட்சகர் 2021.10.28 ஆம் திகதி இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்ளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
அழுத்தகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட விவசாய செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவரினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 25,000.00 பணத்தை இலஞ்மாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய பென்தொட> மிரிஸ்வத்தை> பஹலகம் 6 கமநல சேவை மத்திய நிலையத்தின் கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் 2021.10.25 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது கைது செய்யப்பட்டார்.
சாலியவௌ பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய ரூபா 25,000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய, சாலியவௌ பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் கன்ஸ்டபல் 2021.08.03 ஆம் திகதி புத்தளம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைதுசெய்யப்பட்டார்.
அலுத்கம தர்கா நகரில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய 3,000.00 பணத்தை இலஞ்சமாகக் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய போருவளை கோட்டத்தின் திடீர் மரண பரிசோதகர் 2021.08.03 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாhத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைதுசெய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954