இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆதரவுடன் “ஊழலற்ற நேர்மையான
தேசத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறைகளின் ஐந்தாவது நிகழ்வு வட மாகாணத்தையும் ஆறாவது நிகழ்வு வடமேல் மாகாணத்தையும் மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதனடிப்படையில் இதுவரையில் 06 மாகாணங்களில் இந்நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் புதிதாக பதவியேற்ற உதவி ஆணையாளர்கள் 57 பேருக்கு 2024 ஜனவரி 19ம் திகதி அறிவுறுத்தல் நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டது. இங்கு புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவும், ஊழலுக்கெதிரான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும், நேர்மைத்திறனான அரச சேவை தொடர்பாகவும் மற்றும் அரச ஊழியர்களின் பொறுப்புக்களும் கடமைகளும் தொடர்பாகவும் விடய கற்கைகள் மற்றும் நடைமுறை செயற்பாடுகளைப் பயன்படுத்தி விளக்கப்பட்டது. இந்நிகழ்வின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர் (சட்டம்) திருமதி. ஆமா விஜேசிங்ஹ மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளான உதேஷிகா ஜயசேகர, மதூகா ருவன்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகவர்களான சோஃபியா ஸென்ங் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் 2024.01.17 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களை சந்தித்தனர். அதற்கு மேலதிகமாக அந்நிதியத்தின் அதிகாரிகளான ஜொயெல் டர்க்விட்ஸ் மற்றும் சர்வத் ஜஹான் ஆகியோர் நிகழ்நிலை மூலமாக இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், இந்நாட்டிலிருந்து ஊழலை முற்றாக ஒழிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களுக்கும் பொலீஸ் மாஅதிபருக்கும் (பதில் கடமை) இடையிலான விஷேட சந்திப்பொன்று 2024 ஜனவரி 17ம் திகதி ஆணைக்குழுவில் இடம்பெற்றதுடன், ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. இதனடிப்படையில், பொலீஸ் திணைக்களத்தில் கடமை புரியும் புலனாய்வு தொடர்பான அறிவும், அனுபவமும் மிக்க அதிகாரிகளை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவிற்கு இணைப்பாக்கம் செய்வதற்கும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பதிதாக உருவாக்கப்பட்ட துறைகளான பண மோசடி மற்றும் தடயவியல் புலனாய்வு விடயங்கள் தொடர்பாகவும் மற்றும் புதிய சட்டத்திற்கு உள்வாங்கப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்பொழுது ஆணைக்குழுவில் கடமை புரியும் புலனாய்வு அதிகாரிகளுக்கு விடய அறிவினைப் பெற்றுக்கொடுத்தல், புதிய சட்டத்தின் அடிப்படையில் கூட்டு விசாரணையில் ஈடுபடுவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மருதமுனை பிரதேச நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற தொழிலாளர் அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முறைப்பாட்டாளரால் குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் வழங்கப்படுவதில்லை என்று முறைப்பாடொன்று அம்பாறை காரியாலத்திற்கு வந்ததாகக் குறிப்பிட்டு, அதனை தான் விசாரிப்பதாகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் உதவுவதாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர் அதற்காக 10000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற வேளையில் 2024.01.18ம் திகதி பிற்பகல் 6.44 மணியளவில் மருதமுனை அல் கயாம் ஹோட்டல் முன்னால் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற உதவிப் பொலீஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள், முறைப்பாட்டாளரினால் தன்னுடைய வீட்டில் நடத்திச் சென்ற சட்ட விரோத கசிப்பு விற்பனையை சுற்றிவளைத்து முறைப்பாட்டாளரை கைது செய்தாலும், வழக்கத் தொடுக்காமல் இருப்பதற்கும், தொடர்ந்தும் கசிப்பு விற்பனையை நடாத்திச் செல்ல அனுமதிப்பற்கும் 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற போது 2024.01.16 அன்று மாலை 18.40 அளவில் நாரம்மலையில் உள்ள குறித்த முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவில் இணைந்த கடமையில் ஈடுபட்ட புலனாய்வு அதிகாரியொருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டமை தொடர்பாக பிலியந்தலை பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றின்றிற்கு அமைய கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தேக நபர் 2024.01.12ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு 2023 டிசம்பர் 21ம் திகதி முதல் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
KE - 3845
KE–3845 இலக்கமுடைய வாகனத்தை சுங்கத்திணைக்களத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டு வந்து போக்குவரத்து திணைக்களத்தின் கணிணித்தரவிற்கு போலியாக உற்படுத்தி, இலங்கை அரசிற்கு 2இ587இ500ஃ- ரூபாயிற்கு அதிகமாக நட்டம் ஏற்படுத்தியது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய உளவுத்துறை புலனாய்வு செய்துள்ளது.
2003 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு, டிசம்பர் 09 ஆம் திகதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியதுடன், இந்த ஆண்டு "ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தலின் பிரதான நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சுமார் 500 பாடசாலை மாணவர்கள், இளங்கலை பட்டதாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செயவதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் 05.12.2023 அன்று களுத்துறை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவரைக் கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954