சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான மூன்றாவது மதிப்பாய்வூக்கு சமாந்தரமாக பதவி நிலை மட்டத்திலான கலந்துரையாடல்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதுடன்இ அது தொடர்பான விசேட சந்திப்பொன்று 2024.11.19 அன்று ஆணைக்குழுவின் தலைவர்இ ஆணையாளர்கள் உட்பட அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகவர்களின் பங்குபற்றுதலுடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு வளாகத்தில் இடம்பெற்றது.