ஒரு மோட்டார் சைக்கில் பயணியிடமிருந்து இருந்து ரூ. 3000.00 இலஞ்சமாக கோரிப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 20,000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரு மோட்டார் சைக்கில் பயணியிடமிருந்து இருந்து ரூ. 3000.00 இலஞ்சமாக கோரிப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 20,000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மஸ்கெலியா மிருக வைத்திய அலுவலக பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்காக மிருக வைத்திய அலுவலக பரிசோதகருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 5000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பம்பலப்பிட்டி மேலதிக படைத்தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர், சேவைத்தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பரிந்துரை செய்வதன் நிமித்தம் 150000.00 ரூபாவினை குறித்த பொலிஸ் பரிசோதகரிடம் இலஞ்சமாக கோரி அதனை 50000.00 ரூபாவாக குறைத்து அதனை 2018.12.19 ஆம் திகதி இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகரை கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்தனர். குறித்த நிகழ்வானது2018.11.23 ஆம் திகதி ஆணைக்குழுவின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓய்வு பெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திரு. ரஞ்சித் லால் சில்வா> ஆணையாளர் திரு. நெவில் குருகே> பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன ஆகியோர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்குபற்றியதுடன் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தியதுடன்> மேலும் பலரும் விரிவுரைகளை நிகழ்த்தினர். அத்துடன் ஊழல் எதிர்ப்பு தொடர்பான இரு நாடுகளினதும் அனுபவபகிர்வுடனான கலந்துரையாடல் அமர்வாக சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் செல்வதற்கான பொலிஸ் நற்சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான வதவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம சேவகர் சான்றிதழை வழங்குவதற்காக> கொழும்பு பிரதான பிரதேச செயலகத்தில் பணிபுரியும் கிராம சேவகர் ஒருவர் ரூபா 5000.00இனை முறைப்பாட்டாளரிடமிருந்து கோரி அதனை 2018.11.19 ஆம் திகதி இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த கிராம சேவகரை கைது செய்தனர்.
தென் மாகாணம் காலி மற்றும் மாத்தறை கல்வி வலயங்களில் நேர்மை குழுக்களை மேற்பார்வை செய்தலும் விழிப்பூட்டல் நிகழ்வும் காலி ஒல்சேன்டிஸ் மற்றும் காலி சவுத்லேண்ட் வித்தியாலயத்திலும் மாத்தறை ஓபாத மஹா வித்தியாலயத்திலும் 2018 ஒக்டோபர் மாதம்31 மற்றும் 2018 நவம்பர் மாதம் 01 ஆம் திகதிகளில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தடுப்பு நிவாரணப்பிரின் கல்விப்பிரிவின் அலுவலர்களினால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் திருகோணமலை மீன்பிடிகூட்டுத்தாபனத்தின் கடற்றொழில் பரிசோதகர் ஒருவர், முறைப்பாட்டாளரின் பதிவு செய்யப்படாத படகு இயந்திரத்திற்குரிய அனுமதி;ப்பத்திரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குடிமகன் ஒருவரின் மூலம் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 35,000 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் குறித்த கடற்றொழில் பரிசோதகர் மற்றும் நபர் ஒருவரினை இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனர்.
2018 நவம்பர் மாதம் 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் கசகஸ்தானில் இடம்பெற்ற நேர்மை மாநாட்டின் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் லால் சில்வா அவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
UNODC இன் பிராந்திய செயலமர்வு இந்தியாவின் புதுடில்லி நகரில் 2018 நவம்பர் 12 முதல் 14 ஆம் திகதிகளில் நடந்தேறியது.
விடயம் - ஊழல் குற்றங்கள் மற்றும் பணச்சலவையுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் நிதிபுலனாய்வுகள் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954