கடந்த வருடங்களில் நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாக்கப்பட்டோர் விபரம்
கடந்த வருடங்களில் நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாக்கப்பட்டோர் விபரம்
பாராளுமன்ற அமைச்சரவையின் அனுமதியின் கீழ் அரச நிறுவனங்களில் தடுப்பு நிவாரண செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ரூபா 200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக கணக்கியல், நிதியியல், பிணையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் தேர்ச்சி பெற்ற சிறப்பு விசாரணை அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதன் படி கிடைக்கப்பெற்ற 8000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து உரியபதவிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கான தேர்வுப்பரீட்சை ஒக்போடபர் மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை பரீட்சை திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட நகர்களின் பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
நாட்டின் நீண்ட கால தேவையொன்றாக கருதப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயல்திட்டத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து யு. எஸ்.எய்ட் நிறுவனத்தின் அனுசரணையில் நாடு தழுவிய அடிப்படையிலான சுமார் 30 கலந்துரையாடலகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
2018.04.05 ஆம் திகதி முறைப்பாட்டாளரான ரி. எல். முஹம்மது ரவுப் வதியும், மஹாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான வெலிகந்த சிங்ஹபுர முதுவெல்ல மஹாவலி நிலைய முகாமையாளரின் பரிந்துரையைப் பெற்றுக் கொள்வதற்கு, அவரினால் பரிந்து கோரப்பட்ட ரூபா 20,000.00 இனைமுறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2018.10.19ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் முதுவெல்ல மஹாவலி நிலைய முகாமையாளரினை கைது செய்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவரினால் 2005.03.31 தொடக்கம் 2006.03.31 வரையான காலப்பகுதியில் சுமார் ரூபா 35 இலட்சங்களை அவருடைய அறியப்பட்ட வருமானத்திற்கு அப்பால் செலவு செய்தமை அல்லது முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியான கடற்படையின் உதவி பொறியியலாளர் ரூபா 35 இலட்சம் தண்டம் விதித்துத் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியினால் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்றிட்டத்தினை தயாரிப்பதற்கான இறுதி கலந்தரையாடல் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி கொழும்பு ஜெய்க் ஹில்டனில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில் அரச நிறுவனங்களின் பிரதானிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
தேசிய கால்நடை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கே. முத்துவிநாயகம் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் கணக்கு உதவியாளரும் கட்டுகஸ்தொட்டை பிரதேச வியாபாரி ஒருவரிடமிருந்து ரூபா 6 இலட்சத்தினை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அலுவலர்களினால் கைது செய்யப்பட்டார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்ற பொலிஸ் அலுவலர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஏலவே நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை, மேல்நீதிமன்றம் உறுதிபடுத்தி தீர்ப்பளித்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவினால் உடுகம வலயக்கல்வி வலய பாடசாலைகனின் அதிபர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பிலான விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2018செப்டம்பர் மாதம் 04ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் புலனாய்வு பிரிவு பணிப்hளர் திரு பிரயன்த சந்திரசிரி> உதவிப்பணிப்பாளர் சட்டம் தனூஜா பண்டார மற்றும் ஆணைக்குழுவின் அலுவலர்கள் சிலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் நேர்மைத்திறன் மிகு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தேசிய செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக கம்பஹா மாவட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கான தடுப்பு நிவாரண விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் 2018 செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பி.ப 2.00 மணி வரையும், கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓய்வு பெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திரு. ரஞ்சித் லால் சில்வா, ஆணையாளர் திரு. நெவில் குருகே, பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர் திரு சுனில் ஜயலத் உள்ளிட்ட அரச அலுவலர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954